Category:
Created:
Updated:
அமெரிக்க விமான நிறுவனமான ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண் பயணி பயணித்துள்ளார்.
விமானம் நடு வானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த பெண் பயணி கழிவறையை பயன்படுத்த சென்றுள்ளார். ஆனால், அப்பெண் கழிவறையை பயன்படுத்த விமான ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.
விமானத்தின் கழிவறை பூட்டப்பட்டுள்ளது. தன்னை கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கும்படி அப்பெண் பயணி விமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சுமார் 2 மணி நேரமாக அப்பெண் பயணி கழிவறையை பயன்படுத்த விமான ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பயணி விமானம் நடு வானில் பறந்துகொண்டிருந்த நிலையில் தன் இருக்கை அருகேயே சிறுநீர் கழித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.