Category:
Created:
Updated:
நாட்டின் சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சியும் பேரழிவும் ஏற்பட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசி மற்றும் மருந்து இறக்குமதி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு இழப்பீடு வழங்கப்படுமென கூறும் சுகாதாரத்துறை அமைச்சர் தனது தவறையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இழப்பீடுகளை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறையின் அதிகாரிகள் தமது தனிப்பட்ட சொத்துக்களிலிருந்தே வழங்கவேண்டும் என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை (14) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.