சினிமா செய்திகள்
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கான காரணத்தை சொன்ன வக்கீல்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய
பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறிய தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா
கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்த நிலையில், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.  
 ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இரு
சிறையில் தூக்கமின்றி தவிக்கிறார் நடிகை கஸ்தூரி
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்
இயக்குர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாக
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், திரு தனுஷ், பல தவறான விஷயங்களை நேர்மையாக சரி செய்வதற்காக இந்த
நயன்தாராக்கு குவியும் ஆதரவு
நடிகர் தனுசுக்கு எதிராக நடிகை நயன்தாரா குற்றம் சாட்டிய நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள
தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார்
நடிகை கஸ்தூரி தமிழகத்தை ஆளும் திமுக மற்றும் திராவிட சித்தாந்தம் பேசுபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந
குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்
குழந்தைகள் தினமான இன்று நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட உறுதியேற்போம் என
புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலா ஒரு பாட்டுக்கு வாங்கிய சம்பளம்
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற படம் புஷ்பா. இதன் இரண்டாம் பாகம் நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்து வந்த ந
அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப் போடப்பட்டிருப்பதாக கூறினார் நடிகை கஸ்தூரி
சமீபத்தில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவ
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்
Ads
 ·   ·  8058 news
  •  ·  5 friends
  • I

    9 followers

நாட்டை கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் அவசியம்

நாட்டைக் கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் இன்றியமையாதது எனவும், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதுடன் அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கான முறையான புதிய வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

அரசாங்கம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாவிலிருந்தும் அதிகபட்ச பெறுமதி பெறப்பட வேண்டும் எனவும், ஆனால் அது பெரும்பாலும் அரச செலவின செயற்பாடுகளில் முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரச வருமானத்தை மறப்பது மாத்திரமன்றி எந்தவித பலனுமற்ற நடவடிக்கைகளுக்காக அரச நிதி கட்டுப்பாடற்ற விதத்தில் செலவு செய்யப்படுவதும் இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது என்று தெரிவித்தார். அத்துடன், கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்படாமையே இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள நிதிப் பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வருமான வரி மற்றும் அரச நிதி நிலைமை குறித்து ஆராய தற்பொழுது பாராளுமன்றத்தில் பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக புதிய வருமான வழிகளை உருவாக்குவதற்கான மூலோபாயங்களைக் கண்டறிவதற்காக நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த அறிக்கை இராஜாங்க அமைச்சரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்க மற்றும் கலால் திணைக்களங்கள் என்பவற்றின் வருமான இலக்குகளை அடைவதற்கான முறையான சூழலை உருவாக்குதல், அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கான புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அதற்கான டிஜிட்டல் பொருளாதார பின்னணியை தயார் செய்தல் தொடர்பான முன்மொழிவுகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

  • 295
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads