Category:
Created:
Updated:
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கடந்த வெள்ளிக்கிழமை இணையத்தில் நடத்திய பிரசங்கத்தின் மூலம் மாத்திரம் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், போதகர் சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்ததாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவரவில்லை என சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
புத்தரை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்னும் வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு எதிரான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
போதகரின் மனைவி மற்றும் பிள்ளைகள் நாட்டிற்கு வந்திருந்தாலும், அவர் இன்னும் வெளிநாட்டில் இருந்து இணையத்தில் பிரசங்கம் செய்கிறார்.
இந்நிலையில் அவர் இலங்கை வந்தவுடன் கைது செய்யத் தயார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.