சர்ச்சையில் சிக்கிய பி.பி.சி. செய்தி நிறுவனம்
இங்கிலாந்து நாட்டில் உள்ள பி.பி.சி. செய்தி சேனல் ஊழியர், ஒருவருக்கு அவருடைய 17 வயதில் இருந்து, மூன்று ஆண்டுகளாக ரூ.37.19 லட்சம் வரை பணம் கொடுத்து அதற்கு பதிலாக, ஆபாச படங்களை பெற்று வந்த விவகாரம் தெரிய வந்து உள்ளது.
இங்கிலாந்து கலாசார மந்திரி லூசி பிரேசர் கூறும்போது, ஆழ்ந்த வருத்தங்களை ஏற்படுத்த கூடிய இந்த குற்றச்சாட்டுகள் பற்றி பி.பி.சி. இயக்குநர் ஜெனரல் டிம் டேவியிடம் பேசியுள்ளேன். இதுபற்றி விரைவாகவும் மற்றும் உணர்வுப்பூர்வ முறையில் விசாரணை நடத்தப்படும் என தனக்கு உறுதியளித்து உள்ளார் என கூறியுள்ளார்.
இந்த செய்தியை முதலில் வெளியிட்ட தி சன் பத்திரிகை நிறுவனம், அந்த டீன்-ஏஜ் நபரின் தாயார் கூறும்போது, பெயர் வெளியிடப்படாத அந்த பி.பி.சி. பணியாளர் தனது குழந்தைக்கு ரூ.37 லட்சத்திற்கு கூடுதலாக 3 ஆண்டுகளாக கொடுத்து வந்து உள்ளார் என கூறியதாக தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் பற்றி அந்நபரின் குடும்ப உறுப்பினர்கள் கடந்த மே மாதம் பி.பி.சி.யிடம் புகார் அளித்து உள்ளனர். இதனை பி.பி.சி. நிறுவனமும் (ஞாயிற்று கிழமை) உறுதி செய்து உள்ளது. இதனை தொடர்ந்து ஆண் பணியாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.
அந்த டீன்-ஏஜ் நபர் ஆணா, பெண்ணா என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரவில்லை. கடந்த மே மாதத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான பிலிப் ஸ்கபீல்டு, சக பணியாளருடன் வைத்திருந்த உறவால் பணியில் இருந்து அவர், விலகினார். புத்திசாலித்தனமற்ற ஆனால், சட்டவிரோதம் அல்லாதது என பிலிப் அந்த உறவை குறிப்பிட்டார்.