தாயாரால் வீட்டிற்குள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மகன்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்தவர் ரூடி பரியாஸ் (25). இவருடைய தாயார் ஜானி சந்தனா. ரூடி பரியாஸ் 2015-ல் தனது 17 வது வயதில் காணாமல் போனதாக ஜானி சந்தனா போலீசில் புகார் அளித்து உள்ளார்.
திடீரென 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரூடி வெளீயே வந்து உள்ளார். அப்போதுதான் ரூடி காணாமல் போகவில்லை என்றும், தனது தாயாரால் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் கூறியுள்ளார்.
தன் மகன் ரூடியை இன்னும் காணவில்லை என்று பிடிவாதமாக இருந்து அவரது தாயார் தொடர்ந்து போலீசாரை ஏமாற்றி வந்து உள்ளார். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆர்வலர் குவானெல் எக்ஸ் கூறியதாவது, ரூடியின் தாயார் அவரை ரூடியின் தந்தை போல இருக்குமாறு வற்புறத்தி உள்ளார்.
ஒரு அடிமையைப் போல வாழ்ந்து வந்து உள்ளார். இதனால் 2015-ல் ரூடி வீட்டை விட்டு ஓடிப்போய் பிறகு இரு நாட்களில் திரும்பி வந்திருக்கிறார். ஆனால் ரூடியின் தாயார் அவரிடம் இது குறித்து வெளியில் சொன்னால் சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் கூறி அச்சுறுத்தியிருக்கிறார்.
ரூடியை அவரது தாயார் படுக்கையில் தனது அருகில் படுக்க வைத்து அப்பாவைபோல் செய்யவேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இது பிடிக்காமல், தப்பிப்பதற்காக ரூடி படுக்கைக்கு அடியில் ஒளிந்து கொண்டிருந்தாலும், தாயார் ஜேனி, ரூடியை அழைத்து தனது அருகே படுக்க வைத்து கொள்வார்.
ரூடிக்கு போதை மருந்துகளும் அளித்திருக்கிறார். இதனால் பயந்து போலீசை நாடாமல் இருந்துள்ளார். ரூடியை ஒரு சிறந்த போதை மறுவாழ்வு இல்லத்திற்கும், நல்ல மனநல காப்பகத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும். ரூடி கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என ஆர்வலர் குவானெல் தெரிவித்திருக்கிறார்.
இவ்வளவு கொடுமைகளுக்கு பிறகும், தனது தாயார் சிறைக்கு செல்வதை ரூடி விரும்பவில்லையாம். அவரது தாயார் ரூடியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் கூற்றுக்களை போலீசார் மறுக்கின்றனர்.