Category:
Created:
Updated:
இங்கிலாந்து மற்றும் கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயலில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த மாதம் 18-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என அவர்களின் போட்டோக்களுடன் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும். இந்த கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கனடாவில் வரும் 18-ம் தேதி பேரணி நடத்தப்போவதாகவும், காலிஸ்தான் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.