கிராமிய மட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை
கிராமிய மட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ஹட்டன் நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்னில்கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“துன்பத்தின் பிடிக்குள் சிக்கியிருந்த நாட்டு மக்களை மீட்டெடுத்த சிறந்த தலைவரே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார்.
அஸ்வெசும திட்டம் தொடர்பில் இதுவரை 4 லட்சத்து 91 ஆயிரம் மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 6 ஆயிரத்து 773 ஆட்சேபனைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
குறித்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பில் பரிசீலனை நடத்தப்பட்டு குறைந்த வருமானம் பெறும் பயனாளிகளுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அஸ்வசும திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கப்படும்.
ஐக்கிய தேசியக் கட்சியை கிராமிய மட்டத்தில் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.