Category:
Created:
Updated:
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளராக டகாஃபுமி கடொனோ நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரைகாலமும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளராகப் பணியாற்றிய சென் செனின் பதவிக்காலம் கடந்த ஜுன் மாதம் 30 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் அப்பதவிக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டகாஃபுமி கடொனோ, 'சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும். அதேவேளை அந்த ஒத்துழைப்புக்கள் மூலம் இலங்கை மக்கள் பயனடைவது உறுதிப்படுத்தப்படும்' என்ற தெரிவித்துள்ளார்.