14 வயது சிறுமியின் நிலைகண்டு பதறிய பெற்றோர்
புதுச்சேரி லாஸ்பேட்டை சேர்ந்த பெற்றோர் தங்களது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மகளுக்கு ஆன்லைன் வகுப்பிற்காக ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்தனர். மகள் படிப்பில் சுட்டி என்பதால் ஸ்மார்ட் போனுடன் அலைவதை பெற்றோர்கள் கண்டுகொள்ளவில்லை. ஒரு நாள் நள்ளிரவில் கண்விழித்து பார்த்த தாய், பக்கத்து அறையில் மகள் ஆடையின்றி நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பதறிப்போன தாய், விசாரித்த போது சிறுமி சொன்னதை கேட்டு மேலும் அதிர்ச்சியடைந்தார். ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் வாங்கி கொடுத்த போது, சிறுமி முகநூல் பக்கத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தியுள்ளார். சேலம் என்ற முகவரியில் அழகான போட்டோவுடன் இருந்த இளைஞருக்கு நட்பு அழைப்பும் விடுத்துள்ளார். அந்த இளைஞரும் ஏற்றுக்கொள்ள இருவரும் சாட்டிங் செய்ய ஆரம்பித்தனர்.
சிறுமியை காதலிப்பதாக கூறிய இளைஞர், பாலியல் ரீதியாக பேசியுள்ளார். பாலுறுப்புகளை தூண்டும் விதமாக இளைஞர் பேசியது சிறுமிக்கு பிடித்துப்போக, சாட்டிங் தொடர்ந்துள்ளது.
சிறுமிக்கு மூளைச்சலவை செய்த இளைஞர் ஒரு கட்டத்தில் தனது நிர்வாண போட்டோவையும் வீடியோவையும் சிறுமி அனுப்ப, பதிலுக்கு அந்த இளைஞரும் தனது அந்தரங்க வீடியோவை அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து ஒரே நாளில் பலமுறை ஆபாசமாக வீடியோ கால் பேசும் படி சிறுமியை இளைஞர் வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுமிக்கு ஆபாசமாக பேச வராததால், உன் வீடியோவை நெட்டில் ஷேர் செய்து விடுவேன் என இளைஞர் மிரட்டியுள்ளார்.
பயந்து போன சிறுமி, நள்ளிரவு நேரத்தில் ஆடையின்றி நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தனது மகளுக்கு நேர்ந்தது வேறு பெண்ணுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என கருதிய பெற்றோர் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் புகார் அளித்தனர்.
வழக்குப்பதிவு செய்த முத்தியால்பேட்டை காவல்துறையினர், சிறுமியை மிரட்டிய முகநூல் முகவரியில் இருந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது அவருக்கு இதற்கும் எந்த தொடர்பு இல்லை என்பதும், போலி முகவரியை வைத்து மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சைபர் க்ரைம் உதவியுடன் சிறுமியுடன் பேசிய இளைஞரின் எண்ணை பயன்படுத்தி விசாரித்த போது தஞ்சாவூரை சேர்ந்த எம்,ஏ.. எம்.பில்…, பி.எட் பட்டதாரியான கமலக்கண்ணன் என்பது தெரியவந்தது.
அவனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் திருப்பூர் சாயப்பட்டறையில் மேலாளராக பணியாற்றி வந்ததும், வீடியோ சாட்டிங் சேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலி முகநூல் முகவரியை வைத்து பல பெண்களை ஏமாற்றி அவர்களுடன் பாலியல் ரீதியாக சாட் செய்து காதலிப்பது போல நடித்து ஏராளமான ஆபாச படங்களை வைத்திருப்பதும் தெரியவந்தது.
கமலக்கண்ணின் ஸ்மார்ட்போனை ஆய்வு செய்த காவல்துறையினர், சிறுமி மட்டுமல்லாமல் 200க்கும் மேற்பட்ட பெண்களின் 500க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கமலக்கண்ணனை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.