Ads
மருந்து தட்டுப்பாடு - அரசாங்கத்தினால் புதிய வேலைத்திட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுரைக்கமைய நாட்டிற்குள் மருத்துப் பொருட்களுக்கான தற்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு தற்போது முன்னெடுத்து வருகின்றதென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
மருந்துப் பொருட்களின் பெறுகை செயற்பாடுகளை செயல்திறன் மிக்கதாக முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கமைய மருந்து பொருட்களின் தரம் தொடர்பில் தொடர்ச்சியாக அவதானம் செலுத்த தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (2) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Info
Ads
Latest News
Ads