Ads
குமுதினி படகு மீண்டும் சேவையை தொடங்கியது
குமுதினி படக்கானது 1968 ஆம் ஆண்டு முதல் நெடுந்தீவுக்கும் குறிகாட்டுவனுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வருகின்றது. பல தடவைகள் பழுதடைந்த போதிலும், படகினை மீள திருத்தி சேவையில் ஈடுபட்டு வருகின்றது.
குமுதினி படகின் திருத்த வேலைகள் முடிவடைந்தது நேற்று செவ்வாய்க்கிழமை (20) படகு கடலினுள் இறக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் பகுதிக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினி படகு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழுதடைந்துள்ளது.
படகின் திருத்த வேலைகள் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியில் இடம்பெற்றது. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 70 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் படகின் திருத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டன.
படகினை கடலுக்குள் இறக்குவதற்கு பாரம்பரிய முறைப்படி பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு, படகு கடலினுள் இறக்கப்பட்டது.
Info
Ads
Latest News
Ads