அமெரிக்காவில் கடும் சூறாவளி காற்றுடன் மழை - 3 பேர் பலி
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் கடுமையான சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது. இந்த சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தது. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தது. கட்டிடங்களின் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கியது.
ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தது. தொடர்ந்து பெய்த மழையால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கொலராடா, அர்சான் சஸ், புளோரிடா உள்ளிட்ட பகுதிகள் இந்த சூறாவளி காற்றுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டன. ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் பலத்த சேதம் அடைந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது.
சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு 3 பேர் பலியாகி விட்டனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மீட்பு பணிகள் அங்கு முடுக்கிவிடப்பட்டு உள்ளன.