Category:
Created:
Updated:
மேலும் 5,500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழில்நுட்பம், மொழிகள், புவியியல் மற்றும் வர்த்தகம் ஆகிய பாடங்களில் விசேட கவனம் செலுத்தி மூன்று மொழிகளுக்குமான ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.