லொத்தர் சீட்டுகளின் விலை இரட்டிப்பாகிறது
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கிருஷாந்த கிரிஷாந்த மரம்பகே தெரிவித்தார்.
அதன்படி, இருபது ரூபாய் லொட்டரி சீட்டுகளின் விலைகள் இரட்டிப்பாகும்.
தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை இதனை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த உயர்வுக்கு நிதி அமைச்சும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
இதேவேளை, லொத்தர் சீட்டுகளின் விலை அதிகரிக்கப்பட்டால், ஒரு லொத்தர் சீட்டுக்கான விற்பனை முகவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 3.75 ரூபா கொமிஷன் 8 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டுமென கிருசாந்த சுட்டிக்காட்டினார்.
கமிஷன் தொகையை எட்டு ரூபாயாக அதிகரிக்காவிட்டால் லொத்தர் சீட்டுகளை விற்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.