Category:
Created:
Updated:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த 9-ம் தேதி இஸ்லாமா பாத் கோர்ட்டில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை துணை ராணுவம் கைது செய்தது. அவர் அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து பாகிஸ்தான் முழுவதும் வன்முறை ஏற்பட்டது. இம்ரான்கான் கைது சட்ட விரோதம் என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து இம்ரான்கானுக்கு லாகூர் ஐகோர்ட் இரு வாரங்கள் ஜாமின் வழங்கியது. இம்ரான் கானுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் காலம் இன்றுடன் முடிந்த நிலையில், இன்று மீண்டும் இம்ரான் கான் தரப்பில் ஜாமீன் நீட்டிப்பு கோரி லாகூர் ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது. இதையடுத்து அவருக்கான ஜாமீனை ஜூன் 8 ஆம் தேதி வரை நீட்டித்து லாகூர் ஐகோர்ட் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.