வர்த்தகர்கள் அரசியல்வாதிகளின் அடிமைகளாக இருக்கக் கூடாது - சஜித்
சிறு மற்றும் நடுத்தர வணிகர்களின் முன்னேற்றத்திற்கு வேறாக்கப்பட்ட தனி பிரிவொன்று நாட்டு நிர்வாகியின் கீழ் செயல்படுத்தப்பட்டு தெளிவானதொரு கொள்கையுடன் குறிப்பிட்ட கால அட்டவணையுடன் இலக்குடனான பாரிய வேலைத்திட்டத்தை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி தயார் எனவும், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் நலனுக்காக தாம் முன்நிற்பதாகவும், இதனை ஓர் சட்ட கட்டமைப்பினுள் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான பாதை திறக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நாட்டு வர்த்தகர்கள் அரசியல்வாதிகளின் அடிமைகளாக மாறாமல் வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்குப்பதிலளிக்கும் கட்டமைப்பொன்றை நாட்டில் உருவாக்குவதே இடம்பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித்தலைவர் சுட்டிக்காட்டினார்.
தொழில் முயற்சியாண்மையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் பழைய போக்கைகைவிட்டு, முறைமையொன்றின் ஊடாக பதில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்குவது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும் எனவும், பக்கச்சார்பற்ற மற்றும் வெளிப்படத்தன்மை கொண்ட கட்டமைப்பு அமையும்போது, இலஞ்சம் மற்றும் கப்பம் போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இவ்வாறு வங்குரோத்து சூழ்நிலையில் அரசியல்வாதிகளே முதலில் அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டும்என்றும், எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் அத்தகைய அர்ப்பணங்களைச் செய்யதயார் எனவும், குபேரர்களின் கடன்களை தள்ளுபடி செய்வது கடந்த காலங்களில் மேற்கொள்ளப்படும் அதேவேளையில், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் கடனை அறவிட கடுமையான முறைகளை கையாள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.
எந்தவொரு தரப்பினருக்கும் விசேட அங்கீகாரம் வழங்கப்பட்டு கவனிப்பு மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்கப் போவதில்லை எனவும், சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.