
வெசாக் பார்க்க சென்ற 10 பேருக்கு நேர்ந்த கதி
பாணந்துறை, வலான சந்தியில் இன்று (07) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கொழும்பில் இடம்பெற்ற வெசாக் தோரணத்தை பார்வையிட வந்தவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த நபர்களை ஏற்றிச் சென்ற ஜீப் வண்டியின் சாரதி தூங்கியமையினால் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஜீப் வீதியில் கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
ஜீப்பில் கொழும்பில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த குழுவினர் பயணித்துள்ளதுடன் வீதியிலுள்ள மின் கம்பம் மற்றும் இரும்பு வேலி என்பனவும் விபத்தில் சேதமடைந்துள்ளன.
ஜீப் வண்டி கவிழ்ந்ததில் காயமடைந்த 10 பேர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவர். விபத்தில் சிக்கியவர்கள் மத்துகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.