Ads
பேக்கரி உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியாது : இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம்
எரிபொருள், எரிவாயு ஆகியவற்றின் விலை குறைப்புக்கு அமைய பாண் உட்பட வெதுப்பக (பேக்கரி) உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியாது.
ஒரு புறம் விலையை குறைத்து மறுபுறம் மூலப்பொருட்களின் விலையை அதிகரிக்கும் போது விலை குறைப்பது சாத்தியமற்றது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்தார்.
ஒருபுறம் விலையை குறைத்து மறுபுறம் கோதுமை மா,சீனி,முட்டை ஆகியவற்றின் விலை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் எரிபொருள், எரிவாயு ஆகியவற்றின் விலை குறைப்புக்கு அமைய எவ்வாறு பேக்கரி உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியும்.மூலப்பொருட்களின் விலை குறைவடைந்தால் பாண் உட்பட ஏனைய உணவு பொருட்களின் விலையை குறைக்கலாம் என்றார்.
Info
Ads
Latest News
Ads