
எமக்கு உதவி செய்த இந்தியாவை மறந்து விட முடியாது - பிரதமர்
இலங்கை பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்திருந்த பொழுது எமக்கு உதவி செய்தது இந்தியா என்பதை நாம் மறந்துவிட முடியாது.எனவே இலங்கைக்கு இந்தியாவிற்கும் மிகவும் நெருக்கமான ஒரு உறவு இருக்கின்றது என்பதை யாராலும் மறந்துவிட முடியாது இன்றைய இந்த நிகழ்வானது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒர நிகழ்வாக அமைந்துள்ளது என பிரதமர் தினேஸ்குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த இதிகாசமானது பல தசாப்தங்களை கடந்து செல்கின்றது. இலங்கை நாடானது இன்று முன்னோக்கி செல்கிறது என்றால் அதற்கு இந்தியா எங்களுக்கு செய்த உதவிகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.எங்களுடைய நாடு எதிர்நோக்கிய பொருளாதார பின்னடைவின் பொழுது இந்தியாவின் உதவியானது நாம் மீண்டும் எழுந்து முன்னோக்கி நடப்பதற்கான அடித்தளத்தை வகுத்துள்ளது.
மதங்களுக்கு இடையிலான நெருங்கிய புரிந்துணர்வும் எமது பொருளாதார பின்னடைவின் பொழுது எமக்கு பல உதவிகளை பெற்றுக் கொள்ள வழிவகுத்தது.
புத்தரின் போதனைகள் எம்மை நல்வழிப்படுத்துவதற்கு ஒரு தலமாக அமைந்திருக்கின்றது. அதனை நாம் அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும். இன்று நாம் அனைத்து மதங்களுக்கும் அவர்களுக்கான முக்கியத்துவத்தை கொடுத்து வருகின்றோம். என்றார்.