மனைவி மீது அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்
பல ஆண்களுடன் தொடர்பு வைத்து வந்த மனைவியை பலமுறை கணவன் கண்டித்தும் கேட்காததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நெற்குன்றம் பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த ஹேலன் (வயது 51). இவரது மனைவி லஷ்மி (வயது 45). ஹேலன் தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை என மூன்று பேர் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி தனித் தனியாக வசித்து வருகின்றனர்.
மனைவி லஷ்மி தவறான நடத்தையில் ஈடுபட்டு வருவதை ஹேலன் கண்டித்தும் அவர் கேட்காமல் தொடர்ந்து தவறான தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு 11 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி லட்சுமியின் முகத்தில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற ஹேலன் பிறகு தானாகவே காவல் நிலையத்திற்கு வந்து தனது மனைவியை கொன்றுவிட்டதாக கூறி சரணடைந்தார்.
இந்த தகவலின் பேரில் கோயம்பேடு சரக உதவி ஆணையர் மற்றும் உதவி ஆய்வாளர் பூபதி ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி கேஎம்சி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஹேலனை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.