Category:
Created:
Updated:
இலங்கையில் அதிகரித்து வரும் குரங்குகளின் எண்ணிக்கைக்கு தீர்வொன்றை வழங்கும் வகையில், நாட்டிலுள்ள குரங்குகளை சீனாவில் உள்ள மிருகக்காட்சி சாலைகளுக்கு வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
இந்த கோரிக்கைக்கு அமைய, முதற்கட்டமாக ஒரு இலட்சம் குரங்குகள் சீனாவிற்கு வழங்கப்படவுள்ளன. நாட்டிலுள்ள குரங்குகளை வெளிநாட்டிற்கு வழங்குவது தொடர்பான சட்ட நிலைமைகளை ஆராய்வதற்காக, அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.