விவேக்கின் தபால்தலை வெளியிட மத்திய அரசு முடிவு?
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கை கௌரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் ஆசைக்கிணங்க ஒரு கோடி மரக்கன்றுகளை கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலமாக தொடங்கினார். கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார்.
கடந்த 17 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டார். இயற்கை மீது பற்று கொண்ட விவேக்கை கௌரவிக்கும் வகையில், மத்திய அரசு சில முடிவுகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆலோசனையும் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
விவேக் புகைப்பட த்துடன் கூடிய தபால் தலை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் மே மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு விவேக் தபால் தலை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.