Category:
Created:
Updated:
ஆப்கானிஸ்தானில் பெண்களால் நடத்தப்பட்டு வந்த ரேடியோ சேனல் ஒன்றை தலீபான்கள் மூட உத்தரவிட்டுள்ளனர். ரம்ஜான் மாதத்தில் இசை நிகழ்ச்சியை ஒலிபரப்பி இஸ்லாமிய எமிரேட்ஸ் சட்டங்களை மீறி விட்டதாக கூறி தலீபான்கள் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த ரேடியோ சேனலில் பணியாற்றும் 8 ஊழியர்களில் 6 பேர் பெண்கள் ஆவர். பெண்களால் நடத்தப்பட்டு வந்த ஒரே ரேடியோ சேனலும் இதுவே ஆகும்.