அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்ட திருநங்கை
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தின் தலைநகர் நாஷ்வில்லேயில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது பள்ளிக்கூடத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பெண் ஒருவர் மாணவர்கள் மற்றும் ஊழியர்களை சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். எனினும் இந்த கொடூர சம்பவத்தில் 9 வயதுக்குட்பட்ட 3 மாணவர்கள் உள்பட 6 பேர் பலியாகினர்.
துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்து சென்ற போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணை சுட்டுக்கொன்றனர். அதை தொடர்ந்து நடந்த விசாரணையில் துப்பாக்கி சூட்டை நடத்திய 28 வயதான ஆட்ரிஹேல் என்பதும், அவர் திருநங்கை என்பதும் தெரியவந்தது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் அதிரவைத்துள்ளது.