வலுவாக முகம் கொடுக்க தயாராக வேண்டும் - சஜித்
நாட்டின் கல்வி குறித்து கல்வியின் புதிய போக்குகள் குறித்து பேசும் போது அது சிலருக்கு வேடிக்கையாக இருந்தாலும், தான் கூறுவது உண்மைதான் எனவும், கொரோனா வந்தபோது பாணிக்குப் பதிலாக தடுப்பூசிகளைக் கொண்டு வரச் சொன்னாலும் அதை அலட்சியப்படுத்திவிட்டு பாணியை பின்தொடர்ந்ததால் அதிகப் பணம் ஒதுக்கி தடுப்பூசியைக் கொண்டு வர நேரிட்டதாகவும், மருந்து கொண்டு வரச் சொன்னபோதும் எல்லாவற்றையுமே கேலிக்கூத்தாகவே எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், இதனால் நாடு வங்குரோத்தானதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வங்குரோத்தடைந்து விட்டோம் வங்குரோத்தடைந்து விட்டோம் என கூறிக் கொண்டிருப்பதால் வங்குரோத்து நிலையிலிருந்து வெளியேற முடியாது எனவும், ஓர் நாடாக வலுவாக இதற்கு முகம் கொடுக்க தயாராக வேண்டும் எனவும், தனிநபர்களாக நாம் கூடிய அக்கறையுடன் இருக்க வேண்டும் எனவும், நமது உற்பத்தித் திறனைஅதிகரிக்க வேண்டும் எனவும், அதே நேரத்தில் டிஜிடல் ரீதியான கல்வி முறைக்குள் பிரவேசிக்க வேண்டும் எனவும், இதன் மூலம் உலகில் முதல் நிலை நாடாக எமது நாட்டை ஸ்தானப்படுத்த முடியும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இன்று (27) ஹம்பாந்தோட்டை நெதிகம்வில கனிஷ்ட வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.