Category:
Created:
Updated:
இன்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்டன் மூரெ தனது 94 வயதில் உயிரிழந்தார்.
மார்ச் 24 ஆம் தேதி அமைதியான முறையில் இவரின் உயிர் பிரிந்ததாக இன்டெல் நிறுவன வலைத்தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மரணிக்கும் தருவாயில் ஜார்டன் மூரெ அவரின் குடும்பத்தாருடன் ஹவாயில் உள்ள தனது வீட்டில் இருந்துள்ளார். சிலிகான் வேலியில் மதிப்புமிக்க நபர்களில் ஒருவராக ஜார்டன் மூரெ இருந்து வந்தார்.
ஜார்டன் மூரெ மறைவுக்கு ஆப்பிள் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் மற்றும் கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை ஆகியோர் இரங்கல் தெரிவிக்கும் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.