Category:
Created:
Updated:
அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வௌியேற்றம் நாளை காலை 6 மணி முதல் மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காலப்பகுதியில் ஆம்புலன்ஸ் மற்றும் பேருந்துகளுக்கு குறித்த வௌியேற்றத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
வீதி அபிவிருத்தி சபை அதிகாரிகள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துபவர்கள் அத்துருகிரிய மற்றும் கஹதுடுவ வௌியேற்றத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
கொட்டாவ ஊடாக வாகனங்கள் உள்நுழைய முடியும் எனவும் குறித்த பகுதியில் கட்டணம் அறவிடப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.