சினிமா செய்திகள்
இந்தியாவில் முதல் நபராக டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன் - ஹிப்ஹாப் தமிழா ஆதி
இந்தியாவில் Music Entrepreneurship என்ற பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள ஒரே நபர் நான் தான் என நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி தெரி
எம்.ஜி.ஆர் மெய் காப்பாளர்களுடன் தொப்பி கண்ணாடி இல்லாமல் எடுத்த புகைப்படம்
1972 ஆம் ஆண்டு,பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ் கான்ஸ்டபிள்ஸ் ஜேசுதாஸ் மற்றும் ஜேக்கப்புடன்,எம்ஜிஆர் தனது நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியை முடித்து க
ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் பற்றிய முக்கிய அப்டேட்
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. ஜெயில் கதைக்களம் கொண்ட இப்படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலராக ரஜினிகாந்த
விவசாயம் செய்து அசத்தி வரும் நடிகர் கிஷோர்
பொதுவாக நடிகர்கள் என்றாலே சொகுசு வாழ்க்கை, ஆடம்பர பங்களா, ஹைஃபை பிசினஸ் என மாஸாக இருப்பார்கள். ஆனால் நடிகர்  கிஷோர் முற்றிலும் இதற்கு மாறாக வெஸ்டர்ன்
இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாக இருக்கிறது 'காந்தாரா'
கன்னட மொழியில் தயாரான 'காந்தாரா' படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இந்த படத்தின் வசூல்
ஓ.டி.டி. தொடர்களுக்கு தணிக்கை தேவை - விஜயசாந்தி
ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களில் ஆபாச காட்சிகள் எல்லை மீறி இருப்பதாகவும் அவற்றுக்கு தணிக்கை வேண்டும் என்றும் பல தரப்பிலும் தொடர்ந்து வற்ப
விஜய் சேதுபதியை வைத்து ரணகளம் செய்ய காத்திருக்கிறார் மிஷ்கின்
மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்த
மிமிக்ரி கலைஞர் கோவை குணா காலமானார்
நகைச்சுவை கலைஞர் மற்றும் மிமிக்ரி கலைஞர் கோவை குணா சற்று முன் காலமானதாக தகவல் வெளியானதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அசத
பலரையும் சிரிக்க வைக்கும் குக் வித் கோமாளி சிவாங்கி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மனக்கவலை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்
மனம் திறந்த பேசிய ஷகிலா
நடிகை ஷகிலா 80 களின் காலகட்டத்தில் இருந்தே சினிமாவில் இருந்து வருகிறார். தமிழில் இவர் ஆரம்ப காலகட்டத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார
மயில்சாமியின் கடைசி ஆசை என்ன தெரியுமா?
பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி கடந்த மாதம் மாரடைப்பால் திடீரென்று மரணமடைந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இவருடைய கடைசி ஆசை என்ன என்பதும்,
ஜூனியர் என்.டி.ஆர். ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆண்டு ஆஸ்கார் விருது வழங்கும் விழா கடந்த 13-ந்தேதி சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறந்த அசல் பாடல் பிரிவுக்கான
Ads
 ·   · 6121 news
  •  · 3 friends
  • I

    8 followers

விபத்தில் சிக்கியது இம்ரான் கானின் பாதுகாப்பு வாகனம்

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்தபோது பெறப்பட்ட பரிசுகளை, குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு விற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை கைது செய்ய, ஜாமீன் பெற முடியாத வகையில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த கைது வாரண்டை நிறுத்தி வைக்கும்படி இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்ரான் கான் நீதிமன்ற உத்தரவுகளை எப்போதும் பின்பற்றுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதால் அவரை காவல் துறையால் கைது செய்ய முடியாது என்று அவரது வழக்கறிஞர் இமாம் வாதிட்டார். ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டை அணுகி வாரண்ட் மீது தற்காலிக தடை பெறலாம் என்று கூறினார். இதனையடுத்து இம்ரான் கான் தரப்பில் இஸ்லாமாபாத் உயர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீது விசாரணை நடத்திய ஐகோர்ட்டு, மார்ச் 13-ம் தேதி வரை கைது வாரண்டை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டது. 



பரிசு பொருட்கள் வாங்கி, விற்ற வழக்கில் கோர்ட்டில் ஆஜராக இம்ரான் கான் லாகூரில் உள்ள ஜமன் பூங்கா இல்லத்தில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு இன்று புறப்பட்டு சென்றார். அவருடன் பாதுகாப்புக்காக கூடவே வாகனங்களும் சென்றன. அவரது வருகையை முன்னிட்டு இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் முன்பே பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கூடுதல் செஷன் நீதிபதி ஜாபர் இக்பால் முன் இம்ரான் கான் ஆஜராக சென்றார். எனினும், செல்லும் வழியில் இம்ரான் கானின் பாதுகாப்பு வாகனத்தில் ஒன்று திடீரென கவிழ்ந்தது. கடந்த 14ம் தேதி கோர்ட்டு உத்தரவின்பேரில் இம்ரான் கானை கைது செய்ய இஸ்லாமாபாத்தில் இருந்து போலீசார் லாகூருக்கு சென்றனர். எனினும், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், இஸ்லாமாபாத் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது. பி.டி.ஐ. கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இம்ரான் கான் ஒன்பது வழக்குகளில் லாகூர் ஐகோர்ட்டிடம் இருந்து பாதுகாப்பு ஜாமீன் பெற்று உள்ளார். 

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 95
  • More
Comments (0)
    Info
    Category:
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads