இலங்கை ஒரு வலுவான பொது சுகாதார திட்டத்தை கொண்டுள்ளது - பிரதமர்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (26) காணொளி தொழில்நுட்பம் ஊடாக ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவின் 77ஆவது அமர்வில் உரையாற்றினார்.
ஏப்ரல் 26 முதல் 29 வரை நடைபெறவிருக்கும் 77 வது அமர்வின் தொனிப்பொருள் ´ஆசிய-பசுபிக் பிராந்திய ஒத்துழைப்பு, முன்பை விட வலுவான நெருக்கடி மூலம் கட்டியெழுப்புதல்´ என்பதாகும்.
இந்த அமர்பில் கொவிட் -19 தொற்றுநோய் பற்றி பிரதானமாக விவாதிக்க்பபட்டு வருவதுடன், காலநிலை மாற்றம், கடன் நிவாரணம், முதலீடு, சம சுகாதார அணுகல், நிலையான வளர்ச்சி மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் கலந்துரையாடப்படும்.
ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவின் 77ஆவது அமர்வில் உரையாற்ற கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.தற்போது காணப்படும் சவால்களுக்கு மத்தியில் இந்த அமர்வில் கலந்து கொள்ள கிடைத்தமை குறிப்பிடதக்கதாகும்.
தொற்று நிலைமைக்கு மத்தியில் பொருளாதார மற்றும் சமூக நிலையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் மூலோபாய திட்டங்களை உருவாக்கும் நேரத்தில் இந்த அமர்வின் தொனிப்பொருள் மிகவும் காலத்திற்கு உகந்தது என நான் நம்புகிறேன்.
தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறிய நாடுகள் அந்நிலைமையிலிருந்து மீண்டெழுவதற்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு உதவுதல்
-வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை மேம்படுத்தி அதற்கு ஊக்குவித்தல்
-சுற்றுச்சூழல் சுகாதார சுற்றுலாவை ஊக்குவித்தல்
-அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் முதலீடுகளுக்கு ஊக்குவித்தல் மற்றும் அவர்களுக்கு சந்தைவாய்ப்பை ஏற்படுத்தல்
என்பன அவற்றில் முக்கியமானவையாகும். இறுதியாக கொவிட்-19 தொற்று நிலைக்கு மத்தியில் மீண்டும் மீளெழுவதற்கு காலத்திற்கு உகந்த இந்த அமர்வை ஏற்பாடு செய்து, உறுப்பு நாடுகளை ஒரு அரங்கில் ஒன்றிணைய செய்வதற்கான ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டை பாராட்டுகின்றோம் என்று உரையாற்றினார்.