ஆட்சியாளர்கள் நாட்டின் உரிமையாளர்கள் அல்லர் - எதிர்க்கட்சித் தலைவர்
அரசாங்கத்தை ஆள்பவர்கள் நாட்டு மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை சார்ந்து தற்காலிக பொறுப்பாளர்களாக இருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு நாடு தங்களுக்கு முழு உரித்தோடு எழுதித்தரப்பட்டு விட்டது என்ற போக்கில் பலர் நினைப்பதாகவும்,இந்த தற்காலிக நிர்வாகப் பொறுப்பு தேர்தலின் பின்னர் மாறுபடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஒரு அரசியல்வாதிக்கு ஆட்சி நிருவாகத்தின் போது இரு வழிகளிலுமான விடயப்பரப்பு பற்றிய சிறந்த புரிதல் இருக்க வேண்டும் எனவும்,அந்த புரிதல் கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறை ரீதியாக பிரயோகிப்பதற்கும் மேற்பார்வை செய்வதற்குமான திறமை இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
யார் என்ன சொன்னாலும்,ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் சந்தை சக்திகளை அடிப்படையாகக் கொண்ட மனிதநேய முதலாளித்துவத்தைப் பின்பற்றுவதாகவும், ஒரு நாட்டின் செல்வத்தை அரசால் அன்றி, தனியார் துறையாலையே உருவாக்க முடியும் எனவும், இவ்வாறு உருவாக்கப்படும் செல்வம் அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.