Category:
Created:
Updated:
பௌத்த பாலி பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கையிலேயே வியாழக்கிழமை (23) பிக்கு மாணவர்கள் கல்வி அமைச்சுக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் ஆசிரியர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்ற கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் வியாழக்கிழமை நடந்த சம்பவத்தின் போது ஆசிரியர்கள் சிலர் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியினர் வெள்ளிக்கிழமை (24) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.