தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை : பெப்ரல் அமைப்பு
தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை என, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை 11 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது, எனவே தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழுவிற்கு எந்த சட்டத் தடையும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், நடைமுறையில் அரசாங்கம் சுற்றறிக்கைகள் மூலம் நிதியைத் தடுப்பதால் தேர்தலை தாமதப்படுத்துகிறது என ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.இதேவேளை, தேர்தல் தொடர்பான பல்வேறு செலவுகளுக்காக 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொது நிதி ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறாத பட்சத்தில் இப்படி பொது நிதியை வீணடிப்பதற்கு அரச தலைவர்களோ அல்லது அரச அதிகாரிகளோ பொறுப்பேற்பார்களா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மார்ச் 20ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், எதிர்வரும் 9ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.