அமெரிக்காவில் இளைஞர்களை தாக்கும் புதிய நோய்
அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.இங்கு, ஏற்கனவே போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களிடையே ஊடுருவியுள்ளது, பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பொது இடங்களிலும் பொது மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், போலீஸாரும் அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், தற்போது, ஜாம்பி போதைப் பொருள் அதிகரித்துள்ளது.
முதலில் ஹெராயின் போதைப் பொருள் அதிகரித்துள்ள நிலையில், இப்போது ஜாம்பி போதைப் பொருள் அதிகரித்துள்ளதால், இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர்.
டிராங்க் டோப் என அழைக்கப்படும் இந்த ஜாம்பி போதைப் பொருள் பயன்படுத்தியவர்களுக்கு அதிக பக்க விளைவுகள் ஏற்படும் எனவும், இதை உட்கொண்ட சில நிமிடங்களில், மயக்கம் மயக்க எடுத்துக் கொண்டது போல் இருக்கும் என கூறப்படுகிறது.
இதன் மூலம் மூச்சு விடுதலில் சிரமம், மன அழுத்தம், கைல் கால்களில் புண்கள் ஆகியவை ஏற்பட்டு, தோல் முழுவதும் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது. பொது மக்களுக்கு இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.