Category:
Created:
Updated:
தைவான் நாட்டில் அதிபர் சாய் இங் வென் தலைமையிலான குடியரசின் ஆட்சி நடந்து வருகிறது.
இங்கு சுற்றுலாப் பயணிகளை கவர பல புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தைவான் நாட்டிற்கு சுற்றுலாவுக்கு வரும் சுமார் 5 லட்சம் பேருக்கு பணம் அல்லது ஊக்கத்தொகை வழங்க தைவான் அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி, இந்த வரும் மொத்தம் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், இந்த எண்ணிக்கையை வரும் ஆண்டுகளில் அதிகப்படுத்தவும் முடிவெடுத்துள்ளது. மேலும், இந்த ஆண்டில் சுற்றுலா வரும் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கு தலா ரூ.13 ஆயிரத்து 600 பணமாக வழங்கவுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.