Category:
Created:
Updated:
யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இராணுவத்தினர் 15 பேர் வரையில் காயம் அடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கைதடிப் பக்கமிருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தின் போது காயமடைந்த இராணுவத்தினர் 15 பேரும் யாழ்.போதனா வைத்தியசாலையின் 24ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சேதமடைந்த இராணுவ வாகனம் பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை இராணுவ அதிகாரிகளும் பொலிஸாரும் மேற்கொண்டுவருகின்றனர்.