Ads
இந்தோனேஷியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
நேற்று ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் பகுதியில் தொடர்ந்து 5 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அதை தொடர்ந்து தற்போது இந்தோனேஷியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்தோனேஷியாவின் வடக்கிழக்கில் அதிகாலை 05.02 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டராக பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவின் டோபேலா நகரத்திற்கு வடக்கே 177 கி.மீ தூரத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் சுமார் 97 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை
Info
Ads
Latest News
Ads