Ads
கிழக்கு மாகாண பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை பூட்டு
கிழக்கு மாகாணத்தில் உள்ள 32 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
காத்தான்குடி பகுதியில் 25 பாடசாலைகளும், கல்முனையில் 5 பாடசாலைகளும், திருகோவில் பகுதியில் ஒரு பாடசாலையும், அம்பாறை பகுதியில் ஒரு பாடசாலையும் மூடப்படுகின்றது. கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் அடிப்படையில் இவ்வாறு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைகளில் மீள ஆரம்பிக்கும் திகதி எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆளுநர், மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர்களுன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads