Category:
Created:
Updated:
சீனாவில் மக்கள் தொகை குறைய தொடங்கியதால் தற்போது உலக மக்கள் தொகையில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
வேகமாக குழந்தை பிறப்பை குறைத்த காரணத்தால் எதிர்காலத்தில் சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்றும், அதை தவிர்க்க அனைவரும் குறைந்த பட்சம் இரண்டு குழந்தைகளாகவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சீனா உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் பிற நாட்டினர் பொறாமைப்படும் அளவிற்கு சீனாவின் கன்சு மற்றும் ஷான்சி ஆகிய மாகாணங்களில் புதிய முறை அமல்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அம்மாகாணங்களில் திருமணம் செய்து கொள்ளும் புதுமண தம்பதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய 30 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட உள்ளதாம். அவர்கள் எந்த மன உளைச்சலும் இல்லாமல் இருக்கவும், குழந்தையை பெற்றுக் கொள்ளவும் இது உதவும் என கூறப்படுகிறது.