தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 15 ஆயிரத்தை எட்டுகிறது
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1 லட்சத்து 22 ஆயிரத்து 671 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 8 ஆயிரத்து 874 ஆண்கள், 5 ஆயிரத்து 968 பெண்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 43 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 557 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2 ஆயிரத்து 15 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
நேற்று அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 4 ஆயிரத்து 86 பேரும், செங்கல்பட்டில் ஆயிரத்து 163 பேரும், கோவையில் ஆயிரத்து 4 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 84 பேரும், அரியலூரில் 33 பேரும், பெரம்பலூரில் 19 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 18 லட்சத்து 80 ஆயிரத்து 174 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 10 லட்சத்து 66 ஆயிரத்து 329 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 6 லட்சத்து 43 ஆயிரத்து 698 ஆண்களும், 4 லட்சத்து 22 ஆயிரத்து 593 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் அடங்குவர்.
அதில் 12 வயதுக்கு உட்பட்ட 38 ஆயிரத்து 656 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 48 ஆயிரத்து 484 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 39 பேரும், தனியார் மருத்துவமனையில் 41 பேரும் என 80 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.