சினிமா செய்திகள்
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
சிவாஜி கணேசனை பாராட்டிய சாவித்திரி
'பாசமலர்’ வெளியான தினத்தில் மாறுவேடத்தில் திரையரங்குக்கு சென்று படம் பார்த்துவிட்டுத் திரும்பிய சாவித்திரி, “படம் பார்த்து முடித்து பெண்கள் வெளியே போன
ரஜினிகாந்தின் கேளம்பாக்கம் பங்களா
ரஜினிகாந்த் எந்த ஒரு பின்புலனும் இல்லாமல் சினிமாவில் உயர்ந்தவர். ஆனால் அவருக்கு சொத்து எக்கசக்கமாக அதிகரித்தது. அப்படி ஒன்று தான் கேளம்பாக்கம் பங்களா.
நடிகர் சிவாஜி நடிப்பின் மேல் வைத்திருந்த தொழில்பக்தி
1972ல் ராஜா படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது பாலாஜியின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று தெரியாமலே இருந்தது. 1972, மே 4ல் ராஜா ப
தன் வாழ்வில் நடந்த சம்பவத்தை மனம்திறந்து கூறிய நாகேஷ்
நாகேஷ் கூறுகிறார்...  ஒருநாள் காலையில் எனக்கு ஒரு போன் கால் வந்தது. 'நான் உங்கள் ரசிகன்' என்றார் போன் பேசியவர்.  " நல்லது சொல்லுங்க !"  " என் பெயர் சா
அற்புத குரலால் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்கும் பாடகி வாணி ஜெயராம்
தமிழ் சினிமாவின் பின்னணி பாடகிகளுள் மிகவும் முக்கியமானவர் பாடகி வாணி ஜெயராம்; இவரது இயற்பெயர் கலைவாணி. 1945 நவம்பர் 30 அன்று வேலூரில் துரைசாமி ஐயங்கார
Ads
 ·   ·  662 news
  •  ·  15 friends
  • S

    23 followers

ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் “குட்மோர்ணிங்” சொல்லவில்லை. என்பதற்காக ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவனின் கண் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவனையும், மாணவனின் தாயாரையும் அதிபர் உட்பட ஆசிரியர்கள் அச்சுறுத்திய விடயம் அம்பலமாகியுள்ளது.  கணவர் பிரிந்து சென்ற நிலையில் இரு பிள்ளைகளுடன் வசிக்கும் பெண் தனது பிள்ளையை ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலையில் சேர்ந்து அங்குள்ள மாணவர் விடுதியிலும் சேர்த்துள்ளார். 

குறித்த மாணவன் தான் வகுப்பு வரும் போது எழுந்து குட் மோர்னிங் சொல்லவில்லை என கூறி தடியினால் மாணவனை அடித்துள்ளார். அதன் போது தடி கண்ணில் பட்டுள்ளது. அதனால் வேதனையில் மாணவன் அழுத்த போது , தான் கற்பிக்கும் போது,

அழுது தொந்தரவு செய்ய வேண்டாமே என மிரட்டியுள்ளார். அவரது பாடம் முடிந்த பின்னர் வகுப்பு மாணவர்கள் தமது வகுப்பாசிரியரிடம், மாணவனை ஆசிரியை அடித்து கண்ணில் தடி பட்டு அழுது கொண்டு இருக்கிறான் என கூறியுள்ளனர். வகுப்பாசிரியர் மாணவனை அழைத்து சென்று தண்ணீரினால் கண்களை கழுவி விட்டுள்ளார். இருந்த போதிலும் கண் வலி மாணவனுக்கு குறையவில்லை.  பாடசாலை முடிந்து விடுதிக்கு சென்ற பின்னரும் மாணவன் வலியினால் துடித்து அழுத்துள்ளான்.

அது தொடர்பில் சக மாணவர்கள் விடுதி பொறுப்பாளரும், பாடசாலை அதிபருமான பாதிரியாரிடம் கூறியுள்ளனர். அவர் மாணவனை அழைத்து அருகில் உள்ள ஊர்காவற்துறை வைத்திய சாலைக்கு சென்று சிகிச்சை பெறுமாறும், அங்கு வைத்தியர்கள் கேட்டால் விளையாடும்போது

கண்ணில் தடி பட்டு விட்டதாக கூறுமாறும், கூறி சக மாணவனுடன் வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்துள்ளார். வைத்திய சாலையில் கண்ணுக்குள் இருந்து சிறு தடி துண்டினை வைத்தியர்கள் எடுத்துள்ளானர். வைத்தியர் கேட்ட போது, விளையாடும் போது தடி பட்டதாகவே கூறியுள்ளனர்.

இது தொடர்பில் அறிந்த மாணவனின் தாயார் மறுநாள் பாடசாலைக்கு சென்றுள்ளார். பாடசாலையில் மகனை சந்தித்து அது தொடர்பில் கேட்டு அறிந்து கொண்டு பாடசாலை அதிபரை சந்திக்க காத்திருந்துள்ளார். பாடசாலை அதிபர் அறைக்கு அருகில் பல மணிநேரம் காத்திருந்தபோது

அவ்வழியே சென்ற ஆசிரியர்கள் விசாரித்து விட்டு சென்றார்களே தவிர யாரும் அதிபரிடம் கூட்டி செல்லவில்லை. மதியம் 1.30 மணியளவில் இரண்டு ஆண் ஆசிரியர்கள் அதிபர் அறைக்கு பக்கத்தில் உள்ள அறைக்குள் தாயாரை அழைத்து சமாதானம் பேசியுள்ளனர்.

அத்துடன் மகனை வேறு பாடசாலையில் அனுமதிக்க மாட்டீர்கள். என்ன நடந்தாலும் இங்கே தான் கல்வி கற்கவேண்டும் என மிரட்டும் தொனியிலும் கதைத்துள்ளனர். அதற்கு தாயார் தனது பிள்ளைக்கு ஆசிரியை அடித்தது தொடர்பில் ஏன் எனக்கு அறிவிக்கவில்லை?

பிள்ளை வைத்திய சாலைக்கு சென்று சிகிச்சை பெற்று இருக்கிறான், அது தொடர்பில் கூட எனக்கு அறிவிக்கவில்லை. இது தொடர்பில் நான் விடுதி பொறுப்பாளரும், அதிபருமான பாதிரியாரை சந்தித்து கேட்டு விட்டே செல்வேன் என கூறியுள்ளார்.

ஆசிரியர்கள் இருங்கள் அதிபரை அழைத்து வாறன் என போனவர்கள், அதிபரை அழைத்து வரவே இல்லை . பாடசாலை முடிவடைந்து மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் வெளியேறிய பின்னர் 2.30 மணியளவில பாதிரியார் தாயாரை சந்தித்துள்ளார்.

தான் ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் , ஆசிரியை தொடர்பில் உரிய தரப்புக்களும் அறிவித்து விட்டதாகவும் , இனி அவ்வாறு நடக்காது என தாயாருக்கு சமாதானம் கூறி அனுப்பி விட்டு மாணவனை விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

தாயார் சென்றதும் , விடுதியில் வைத்து , “கோத்தைக்கு யாருடா சொன்னது , கொப்பன் ஏன் கோத்தையை விட்டுட்டு போனான் என இப்ப விளங்குது” என சக மாணவர்கள் முன்னால் சகட்டு மேனிக்குள் மாணவனை திட்டி அடித்துள்ளார்.

அதனால் மாணவனின் உடல் முழுக்க தழும்பு வரும் வரையில் அடித்துள்ளார். அத்துடன் மாணவன் மறுநாள் பாடசாலைக்கு தாயார் வந்து கதைத்து விட்டு சென்ற ஆசிரியர்களிடம் மன்னிப்பு கோருமாறும் கூறியுள்ளார். மறுநாள் மாணவன் ஆசிரியர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.

குறித்த மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதுடன், போதனா வைத்தியசாலை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இன்று காலையே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.

  • 824
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads