Ads
75ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஒருவார காலத்துக்கு தேசிய கொடி ஏற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானம்
நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அரச நிறுவனங்கள் அமைந்திருக்கும் கட்டிடங்களில் ஒருவார காலத்துக்கு தேசிய கொடியை ஏற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பெப்ரவரி 4 ஆம் திகதி இடம்பெறும் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் விசேட சந்தர்ப்பமாக கருதி பெப்ரவரி முதலாம் திகதி முதல் 7ஆம் திகதிவரை தேசிய கொடியை ஏற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பான சுற்று நிருபம் அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் விடுக்கப்பட்டிருக்கிறது.
எனவே இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறித்த சுற்று நிருபத்தின் ஊடாக நிறுவன பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Info
Ads
Latest News
Ads