Ads
சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஒத்திகைகள் நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஒத்திகைகள் நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அதற்கமைய நேற்று முன்தினத்தில் இருந்து எதிர்வரும் 3 ஆம் திகதி வரையும் , சுதந்திர தினத்தன்றும் கொழும்பில் வாகன போக்குவரத்துக்களை மட்டுப்படுத்தி , வீதிகளை மூடுதல் மற்றும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.இதற்காக பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் நேற்று முதல் அதிகாலை 5 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை விசேட வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.சுதந்திர தினம் வரை இந்த வேலைத்திட்டங்கள் நடைமுறையிலிருக்கும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
Info
Ads
Latest News
Ads