நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் ; வெகு விரைவில் திசைக்காட்டியின் ஆட்சி வரும் - அநுரகுமார திஸாநாயக்க
இலங்கையில் வெகுவிரைவில் திசைக்காட்டி ஆட்சி அமைக்கவுள்ளதால் தொழில் வல்லுநர்கள் உள்ளிட் அனைத்து தரப்பினரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம். உணர்ச்சியற்ற தலைவர்கள் எம்மை ஆளத் தேவையில்லை என நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போது தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், " நமது நாட்டை ஆள்வது யார்? மதுபான தொழிற்சாலை உரிமையாளர்கள், மணற் கடத்தல்கார்கள், மதுக்கடை உரிமையாளர்கள், கொள்ளையர்கள், குற்றவாளிகள் போன்றவர்களாவர். நெஞ்சில் ஈரம் இல்லாதவர்களால் இந்த நாடு ஆளப்பட்டது. உணர்ச்சியற்ற தலைவர்கள் , மக்களின் சம்பளத்தில் கை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
வெகு சீக்கிரமே எமது திசைக்காட்டியின் அரசாங்கம் தோன்றும். எவரும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டாம் " என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.