Ads
யாருக்கும் தலைவணங்காத, கடனற்ற வலுவான நாட்டை உருவாக்கி வருகின்றேன் : ஜனாதிபதி
அனுராதபுர காலத்தைப் போன்று யாருக்கும் தலைவணங்காத, கடனற்ற வலுவான நாட்டை உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2022 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி -11% ஆக காணப்பட்டதாகவும் இவ்வருடம் அது -3.5% அல்லது -4.0 % வரை குறைவடையலாம் என தெரிவித்தார். எனினும் 2024 ஆம் ஆண்டு முதல் இதனை நேர்மறையான வளர்ச்சிக்கு கொண்டு செல்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.
Info
Ads
Latest News
Ads