Ads
சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகின் ஒரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ : உதய கம்மன்பில
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமைச்சரவை தீர்மானங்கள் ராஜபக்ஷ குடும்பத்தின் இரவு விருந்து உபசாரத்தின் ஊடாக எடுக்கப்பட்டது. ராஜபக்ஷ குடும்ப ஆதிகத்தினால் 69 இலட்ச மக்களின் அரசியல் தீர்மானம் சூன்யமானது. சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகில் ஒரே ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இடம் பிடித்துள்ளார் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
சுதந்திர மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை வெளியிடும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்ல பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Info
Ads
Latest News
Ads