Category:
Created:
Updated:
புதுவையில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ஜி 20 மாநாடு தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது. இதனை அடுத்து ஜி-20 மாநாடு தொடர்பான கூட்டம் நடக்கும் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார்.
நாளை காலை முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஜி 20 மாநாடு காரணமாக நாளை மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.