Category:
Created:
Updated:
ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்சா ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள தன்பாத் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மருத்துவர், அவரது மனைவி மற்றும் உதவியாளர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.