Ads
தினம் ரூ.500 சம்பாதிக்கும் சாலையோர வியாபாரி ரூ.366 கோடி வரி ஏய்ப்பா?
உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சாலையோர துணிக்கடை வியாபாரி அகமது என்பவர் தினமும் 500 ரூபாய் மட்டுமே சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்து ரூபாய் 366 கோடியை வரி ஏய்ப்பு செய்ததாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணையில் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பே தன்னுடைய வியாபாரத்தை நிறுத்திவிட்டதாகவும் அவரது ஜிஎஸ்டி எண்ணை மர்ம நபர்கள் சிலர் பயன்படுத்தி குற்றம் செய்து வருவதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து அந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
Info
Ads
Latest News
Ads