Category:
Created:
Updated:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைந்த நிலையில், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவருக்கு திமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஆதரவளித்துள்ளனர்.
அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னதாக தேமுதிக சார்பில் ஆனந்த் போட்டியிடுவதாக விஜய்காந்த் அறிவித்திருந்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், இத்தொகுதியில், சிவபிரசாந்த் போட்டியிடுவதாக அக்கட்சியில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.